Preloader

முருகன் பெருமை

முருகனை வழிபடுதல்

முருகப் பெருமானை வணங்குதல் தமிழர்களிடையே தொண்டு தொட்டு இருந்து வரும் வழக்கம்.  முருகன் அல்லது கந்தா – குமரா சிவபெருமான் பார்வதி தேவியின் புதல்வர், விநாயகப் பெருமானின் தம்பி. தமிழில் முருகன் என்றால் அழகு, இளமை ஆகியவற்றைக் குறிக்கும்.  முருகனுக்கு, கார்த்திகேயா, சுப்பிரமண்யா, தண்டாயுதபாணி, சண்முகா எனப் பற்பல பெயர்கள் உண்டு.  முருகனுக்கு ஆறு முகங்கள் இருப்பதால் அவருக்கு ஆறுமுகம் என்ற பெயரும் உண்டு.

தேவர்கள் படையின் சேனைத் தலைவராகப் போற்றப்படும் முருகன், பிரம்மனைப் போன்று மிக உயர்ந்த நிலையிலான ஞானத்துக்காகவும் பகதர்கள் வழிபடுகின்றனர்.  தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பெருந்தொல்லை கொடுத்து வந்த அசுரனான சூரபத்மனை அழிப்பதற்காகவே அவதரித்தார் முருகன். சூரபத்மனுடன் கடும் போர் புரிந்த முருகப் பெருமான் அவன் ஒரு மரமாக மாறியபோது, தனது வேல் கொண்டு அவனை அழித்தார். அந்த மரம் இரு பகுதிகளாக உடைந்தது. ஒரு பகுதி மயிலாகவும், ஒரு பகுதி சேவலாகவும் உருவெடுத்தன.

வேல் – முருகனின் ஆயுதம்

முருகப் பெருமானின் வேல், அவரது ஆயுதங்களுள் ஒன்று. அந்த வேலாயுதத்தைக் கொண்டுதான் அவர் அசுரர்களை அழித்தார்.  முருகன் ஆலயங்கள் சிலவற்றில் வேலைத்தான் பிரதானமாக வைத்து வழிபடுகிறார்கள்.

வேல் என்ற சொல்லை உச்சரிக்கும் போதே அது நமது உணர்வுக்குள் ஒரு வித அசைவை ஏற்படுத்துகிறது.  அதன் காரணமாகத்தான் முருகனின் பக்தர்கள் வேல் வேல்|, வெற்றி வேல்|, ஞான வேல்|, சக்தி வேல்| என்று தங்கள் வழிபாடுகளின் போது உச்சரிக்கிறார்கள்.

ஆறுபடை வீடு – முருகனின் ஆறு வீடுகள்

தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுள்களில் ஒருவரும், தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவருமான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் சொல்லப்படும் ஆறு கோயில்கள் ஒவ்வொன்றும் அவருடைய படை வீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அ10றுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு இடங்கள்

  1. திருப்பரங்குன்றம்
  2. திருச்செந்தூர் (அல்லது) திருச்சீரலைவாய்
  3. திருவாவினன்குடி (எ) பழனி
  4. தெருவேரகம் (எ) சுவாமி மலை, சுவாமிநாத சுவாமி கோயில்
  5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல்
  6. பழமுதிர்சோலை

என்பனவாகும்.

முருகனின் அடியார்கள் மேற்காணும் கோயில்களுக்குச் சென்று முருகனைத் தரிசித்து அருளாசி பெற்று வருகின்றனர்.

பதிவிறக்கம் செய்ய
Print Friendly, PDF & Email
Facebook
Facebook
YOUTUBE
Instagram