Preloader

தைப்பூசத் திருவிழா

தைபூசத் திருநாளன்று சந்திர கிரஹணம்


சந்திர கிரகணத்தை முன்னிட்டு, தைப்பூச நாளான 31.01.2018 அன்று கோவில்கள் முன்கூட்டியே மூடப்படும்.

தைப்பூச தினமான 31 ஜனவரி 2018 அன்று, சந்திரகிரகணம் ஏற்பட இருப்பதால், தைப்பூச ஊர்வலம் புனர்பூச தினத்தன்று (30 ஜனவரி 2018),ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து வழக்கத்தை விட முன்பாக, இரவு 9:30-க்கு புறப்பட்டு விடும். ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில் இரவு 10:31-க்கு கதவுகள் திறக்கப் படும்.

அனைத்து பக்தர்களும், தைப்பூச நாளான 31 ஜனவரி 2018 அன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்திற்கு இரவு 6 .30-க்குள் வந்தடையிந்து தங்களது நேர்த்திக்கடன்களையும் நடைப்பயணத்தையும் முடித்துக் கொள்ள வேண்டும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கிரஹணம்

இந்து மதத்தில் சூரியன் மற்றும் சந்திர கிரஹணங்கள் முக்கிய பங்களிக்கின்றன. தொன்று தொட்டு, கிரஹண காலங்களில் இந்து ஆலயங்கள் மூடப்பட்டு வருகின்றன. சூரியன் மற்றும் சந்திரனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கிரஹண காலங்களில் பூமிக்கு வருவது தடைபடுகிறது. ஆகையால் கிரஹண காலங்கள் இந்து மதத்தில் உகந்த காலமாக கருத்தப்படாத காரணத்தால் இந்து ஆலயங்கள் அந்த நேரத்தில் மூடப்பட்டு இருக்கும்.

சிங்கப்பூர் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் இந்தியாவின் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நடைமுறைகளை பாரம்பரியமாக பின்பற்றுகிறது. இந்த ஆண்டின் தைப்பூச தினத்தின் கிரகண நேரங்களில் நடை சாத்தும் விவரங்களுக்கு பழனி ஆலயத்தின் வல்லுனர்களையும் மற்ற தேர்ச்சிபெற்ற அர்ச்சகர்களையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.

சந்திர கிரஹணம் நிகழும் நேரம்:

நிகழ்வு UTC நேரம் சிங்கபூர் நேரம் சிங்கப்பூரில் தெரியுமா?
ஆரம்பம் 31 Jan, 11:48:27 31 Jan, 19:48:27 ஆம்
மத்திமம் 31 Jan, 13:29:51 31 Jan, 21:29:51 ஆம்
முடிவு 31 Jan, 15:11:11 31 Jan, 23:11:11 ஆம்

 

பக்தர்களுக்கான தகவல்கள்


நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஒரு கோயிலிலிருந்து மற்றோர் கோயிலுக்கு பக்தர்களை அழைத்து செல்வதால், பக்தர்களின் பாதுகாப்பும், சௌகரியமுமே தைப்பூசம் போன்ற விழாக்களில், அடிப்படையாக அக்கறை காட்டும் விஷயமாக இருக்கிறது. ஆகவே, பக்தர்கள் முறைப்படுத்தப்பட்ட பாதைகளின் வழியாக நிதானமாகவும், தொண்டூழியர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் நடந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பக்தர்கள், சாலைகளில் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்து, பொது ஒழுங்கை பேணிப் பாதுகாக்குமாறும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

கவனத்தில் கொள்ளவேண்டியவை:

  • அன்னதானமும், பானங்களும் அனைத்துப் பக்தர்களுக்கும், புனர்பூச தினத்தன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வழங்கப்படும். தைப்பூச தினத்தன்று மதியம் 12.15 லிருந்து 3.00 வரை ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் அன்னதானம் வழங்கப்படும்.
  • இசைக் கருவிகளை இசைக்கச் செய்வது, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் சார்ந்த பகுதிகளில் மட்டுமே என்பதை, இசை வல்லுநர்களை ஏற்பாடு செய்துள்ள காவடி எடுக்கும் பக்தர்களுக்கு நினைவூட்டுகிறோம். ஊர்வலம் செல்லும் பாதைகளில், பக்தர்களின் வசதிக்காக, பொது நேரடி இசைக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • காவடிப் பாடல்களை பாட மொத்தமாக 3 நேரடி இசை நிலையங்களும், 19 இசை ஒலிபரப்பு நிலையங்களும், ஊர்வலப் பாதையில் அமைக்கப்படவுள்ளன. தைப்பூச தினத்தன்று காலை 8.00 முதல் மாலை 5.00 வரை நேரடி இசை நிலையங்கள் செயலாற்றும். பெரும்பாலான இசை ஒலிபரப்பு நிலையங்கள் இதே நேரத்தில் செயலாற்றும். இசையானது, விழாக் குழுவினரால் இரண்டு கோயில்களிலும், ஊர்வலப் பாதையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், காவடி எடுப்பவர்கள் மேற்கொண்டு இசை வல்லுநர்களை தங்களோடு நடைப் பயணத்தில் அழைத்து வரத் தேவையில்லை என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
  • பங்குபெறும் விபரங்கள்:

  • தைப்பூச விழாவிற்கு, முறையாக உடை உடுத்தி வருமாறு பக்தர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகத்திலும், உடலிலும் சாயம் பூசி வருவதும், அருவருக்கத்தக்க வகையிலான மாறுவேடம் அணிவதும் தைப்பூச விழாப் பழக்கமல்ல என்பதை நினைவூட்டுகிறோம்.
  • பதினாறு வயதிற்கு உட்பட்டவர்கள் பால்குடம் மற்றும் பால் காவடி மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். 16 வயதிற்கு உட்பட்டவர்கள் அலகு குத்துவதற்கும், அங்கங்களில் கம்பிகளால் குத்துவதற்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • எந்த விதமான காவடியையும் எடுக்கும் பக்தர்கள், அதை கட்டுவதையும், பிரிப்பதையும்; முறையே ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும், ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலிலும் அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • அனைத்து அலகு மற்றும் ரதக் காவடிக்களும், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து கிளம்பும் போது, அடையாள அட்டை வழங்கப்படும். காவடி எடுக்கும் பக்தர்கள் அந்த அட்டையை, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் காவடியை பிரிக்கும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
  • தனது குழுக்களுடன் வரும் ஒவ்வொரு அலகு மற்றும் ரதக் காவடி எடுப்பவர்களும், அந்தக் குழுவிலிருந்து 21 வயதிற்கு மேற்பட்ட ஒருவரை தங்களது பிரதிநிதியாக, அவசர சமயத்தில் ஆலயத்துடன் தொடர்பு கொள்ள நியமிக்க வேண்டும். காவடி எடுப்பவரும், அவரது பிரதிநிதியும், காவடிக்கான அனுமதிச் சீட்டு வாங்கும் போது கையொப்பம் இடவேண்டும்.
  • காவடி எடுப்பவர்கள் குறைந்த பட்சம், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, இரண்டு விளக்க கூட்டங்களில் ஏதாவது ஒன்றிற்காவது வந்திருக்க வேண்டும். விளக்கக்கூட்டம் வியாழக்கிழமை 4 ஜனவரி 2018, மற்றும் சனிக்கிழமை, 6 ஜனவரி 2018 ஆகிய நாட்களில் இரவு 7.00 மணிக்கு பி. ஜி. பி. மண்டபத்தில் நடைபெறும்.
  • தங்கள் வேண்டுதலைச் செலுத்த வருபவர்கள், கீழே குறிப்பிட்ட காலத்திற்குள் கோயிலுக்குள் வந்து, நெரிசலையும், கூட்டத்தையும் தவிர்க்கும் வகையில் புறப்பட்டுவிட வேண்டும். புனர்பூச தினத்தன்று நடைப்பயணம் முன்னதாக ஆரம்பிப்பதால், தங்கள் வேண்டுதலைச் செலுத்த போதுமான கால அவகாசம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பக்தர்களும், காவடி எடுப்பவர்களும், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து மதியம் 1:00 மணிக்குள் கிளம்பி விட வேண்டும்.
  • காலையில் கிளம்பும் காவடிகள் மட்டும் அனுமதிக்கப்படுவதால், கடைசிக் காவடி, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலை மாலை 6:30 மணிக்குள் சென்றடைய வேண்டும். மூன்று பிரிவுகளாக காவடி எடுக்கும் நேரம் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
    - (30/01/2018) இரவு 11:00 மணி முதல் (31/01/2018) காலை 4:00 மணி வரை
    - (31/01/2018) காலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை
    - (31/01/2018) காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
  • பக்தர்கள் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து கீழ்க்கண்டவாறு புறப்பட வேண்டும்:
    பிரார்த்தனை வகை பெருமாள் ஆலயத்தில் நுழைவது பெருமாள் கோயிலிலிருந்து வெளியேறுவது
    பால் குடம் 30/01/2018 மாலை 5:00 முதல் 30/01/2018 இரவு 9:30 முதல்
    பால் காவடி 30/01/2018 மாலை 5:00 முதல் 30/01/2018 இரவு 9:30 முதல்
    தொட்டில் காவடி 30/01/2018 இரவு 11:00 முதல் 31/01/2018 மதியம் 1:00 க்குள்
    ரதக் காவடி (30/01/2018) இரவு 11:00 மணி முதல் (31/01/2018) காலை 4:00 மணி வரை
    (31/01/2018) காலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை
    (31/01/2018) காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
    கடைசி காவடி 31/01/2018 மதியம் 1:00 க்குள்
    அலகுக் காவடி (காலையில் மட்டும்) (30/01/2018) இரவு 11:00 மணி முதல் (31/01/2018) காலை 4:00 மணி வரை
    (31/01/2018) காலை 4:00 மணி முதல் காலை 8:00 மணி வரை
    (31/01/2018) காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
    கடைசி காவடி 31/01/2018 மதியம் 1:00 க்குள்
  • முடிக்காணிக்கை

  • முடிக் காணிக்கை செலுத்துவோருக்கு வசதியாக கோயிலுக்கு அடுத்துள்ள  Teo chew கட்டிடத்தின் அருகில் உள்ள மைதானத்தில் கீழ்க்கண்ட நேரப்படி முடியிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    தேதி நேரம் பங்கேற்பாளர்கள்
    21.01.2018 to 29.01.2018 காலை மாலை முதல் வரை மட்டும் காலை7.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 4.00மணி முதல் 8.00மணி வரை அணைத்து பக்தர்களும்
    30.01.2018 காலை7.00 மணி முதல் 11.00 மணி வரை மட்டும் அணைத்து பக்தர்களும்
    31.01.2018 காலை7.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 4.00மணி முதல் 8.00மணி வரை குழந்தைகளுக்கு மட்டும்
  • முக்கிய குறிப்புகள்:

  • பால்குடம் எடுப்பவர்களில் முதல் பகுதியினர் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்தது சென்ற பிறகு, புனர்பூச தினத்தன்று இரவு 9:30 மணியளவில், சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.
  • பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைக்காக உபயோகப் படுத்திய பொருள்களை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்தது கிளம்புகிற போது, எடுத்துச் சென்றுவிட வேண்டும். அது போலவே, தங்கள் பிரார்த்தனை முடிந்த பிறகு, ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலிலும் குப்பைகள் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில், அலகு குத்தும் சேவைக்காகவும், காவடியை எடுத்து வைப்பதற்காகவும், தொண்டூழியர்கள் அமர்த்தப் பட்டுள்ளார்கள். இச்சேவை தேவைப்படும் பக்தர்கள் ஆலய அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • தைப்பூச ஊர்வலத்தின் போது புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் பக்தர்கள், தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவு செய்யும் காவடி எடுத்த பக்தர்களுக்கு, காவடி பிரிப்பதற்கான இடங்களை, அவை இருக்கும் பட்சத்தில் ஒதுக்கிக் கொடுக்கப்படும். காவடி பிரிக்கப்பட்ட பிறகு, காவடி எடுப்பவரின் பிரதிநிதி, கீழ்க்கண்ட விபரங்களை அந்த பகுதியில் உள்ள பதிவு செய்யும் இடத்தில் கொடுக்க வேண்டும்:
    - காவடி எடுத்தவரின் விபரங்கள்
    - பிரிக்கும் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்
    - காவடியை எடுத்து செல்லும் வாகனத்தின் பதிவு எண்
    காவடி எடுத்தவர் காவடியை பிரித்து வண்டியில் ஏற்ற தயாராக இருக்கும் போது தான் எடுத்துச் செல்லும் வாகனத்தை அனுமதிக்க முடியும்.
  • உயர் ரத்த அழுத்தம், ஆஸ்த்மா, நீரிழிவு நோய் உள்ளவர்கள், இதயக் கோளாறுகள் உடையவர்கள், வேகமான காவடி ஆட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது சம்பந்தமாக உங்களது மருத்துவரிடம் ஆலோசனை பெருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

பக்தர்கள் பங்கேற்ப்பு

தைப்பூசம் சார்ந்த பிரார்த்தனைகளுக்கு தேவையான ரசீதுகளை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களிலும், நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

பிரார்த்தனை வகை கட்டணம் அனுமதிச் சீட்டு வாங்கும் இடம் நேரம் நாள்
பால் குடம் $15 ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்
காலை 8:00 – 12:00 வரை
மாலை 5:00 – 8:30 வரை
14/12/2017 - 29/01/2018
பால் காவடி $30 ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்
காலை 8:00 – 12:00 வரை
மாலை 5:00 – 8:30 வரை
14/12/2017 - 29/01/2018
தொட்டில் காவடி $30 ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்
காலை 8:00 – 12:00 வரை
மாலை 5:00 – 8:30 வரை
14/12/2017 - 29/01/2018
ரதக் காவடி $75 ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்
மாலை 5:00 – 8:30 வரை 14/12/2017 to 27/01/2018
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மட்டும் மாலை 5:00 – 8:30 வரை 28/01/2018 - 29/01/2018
அலகுக் காவடி (காலையில் மட்டும்) $75 ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்
காலை 8:00 – 12:00 வரை
மாலை 5:00 – 8:30 வரை
14/12/2017 to 27/01/2018
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் மட்டும் மாலை 5:00 – 8:30 வரை 28/01/2018 - 29/01/2018

பால்குடம் எடுப்பவர்களுக்கு இரண்டு பகுதிகளிலான அனுமதிச் சீட்டு கொடுக்கப்படும். பக்தர்கள் ஒன்றைப் பால் குடத்தில் ஒட்ட வேண்டும். மற்றதை அபிஷேகம் முடிந்ததும் குடத்தை வாங்கும் போது கொடுக்க வேண்டும்.

ஊர்வல வழித்தடம்

தொடர்புகொள்ள

  • ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் (SSPT)
    397 Serangoon Road
    Singapore, 218123
  • தொலைபேசி
    6298 5771
  • மின்னஞ்சல்
    sspt@heb.org.sg
  • ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் (STT)
    15 Tank Road
    Singapore, 238065
  • தொலைபேசி
    6737 9393
  • மின்னஞ்சல்
    office@sttemple.com

உங்கள் கருத்து

Facebook
Facebook
YOUTUBE
Instagram